காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த 3 மாதங்களேயான பெண் சிசுவொன்று சகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பாத்திமா ஷெ‪ய்னப் (3 மாதங்கள்) எனும் பெண் சிசு சுகயீனம் காரணமாக இன்று (03.04.2018 )செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்தில் மரணித்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இக்குழந்தை எந்த நோயினால் பீடிக்கப்பட்டிருந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

குழந்தையின் மரணம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.