யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை நெடுங்குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த தயா என அழைக்கப்படும் 55 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார்.  

குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது  தனது வீட்டுக்கு அருகாமையிலுள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில்  யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.