கரவெட்டி பிரதேச சபையின் முதலாவது அமர்வு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் ஆரம்பமானது.
கரவெட்டி பிரதேச சபையின் தலைவர் பதவிக்கான போட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தங்கவேலாயுதம் ஐங்கரனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ச. இராமநாதனும் பிரேரிக்கப்பட்டனர்.
31 உறுப்பினர்களைக்கொண்ட கரவெட்டி பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 9 உறுப்பினர்களையும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன தலா 7 உறுப்பினர்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி. ஆகியன தலா 3 உறுப்பினர்களையும் ஐ.தே.கட்சி 2 , உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.
பகிரங்க வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என 11 பேரும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என 10 பேரும் கோரினர்.
வாக்கெடுப்பு இரகசியமாகவே நடாத்தப்பட வேண்டும் என இராமநாதன் வலியுறுத்தினார். சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அவ்வாறு மேற்கொள்ள முடியாது என ஆணையாளர் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.
அவ்வாறானால் சட்டத்தை நாடவுள்ளதாக இராமநாதன் குறிப்பிட்டப்போது, அது உங்கள் உரிமை என ஆணையாளர் தெரிவித்து பகிரங்க வாக்கெடுப்பை நடாத்தினார்.
இதில் கூட்டமைப்பின் உறுப்பினர் தங்கவேலாயுதம் ஐங்கரன் 11 வாக்குகளையும் சுதந்திரக் கட்சி உறுப்பினர் இராமநாதன் 10 வாக்குகளையும் பெற்றனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.
வாக்கெடுப்பின் நிறைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM