இளம் தாய் ஒருவர் குளிக்கும் காட்­சியை தனது கைப்­பே­சியில் வீடியோ எடுத்து கொண்­டி­ருந்­த­தாக கூறப்­படும் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக ஆரச்­சிக்­கட்டு பொலிஸார் தெரி­வித்­தனர்.  முந்தல் பத்­துளு ஓயா பிர­தே­சத்தை சேர்ந்த திரு­ம­ண­மான 34 வய­து­டைய ஒரு பிள்­ளையின் தந்தை ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராவார்.  

இச் ­சம்­பவம் தொடர்பில் குறித்த இளம் தாய் ஆரச்­சிக்­கட்டு பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டை தொடர்ந்தே சந்­தேகநபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

தான் தனது வீட்­டுக்கு அரு­கா­மையில் குளித்து கொண்­டி­ருந்த போது தான் குளிக்கும் காட்­சியை ஏணி ஒன்றில் ஏறி நின்று கொண்டு சந்­தேகநபர் தனது கைப்­பே­சியில் வீடியோ எடுத்து கொண்­டி­ருந்­த­தாக அப்பெண் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ளார்.  எனினும் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து குறித்த கைப்­பேசி மீட்­கப்­பட­வில்லை என பொலிஸார் தெரி­வித்­தனர். 

சம்­பவம் தொடர்பில் ஆரச்சிக்கட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.