கோல்ட் கோஸ்­டி­லி­ருந்து  எஸ்.ஜே.பிரசாத்

அவுஸ்திரே­லியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள 21ஆவது பொது­ந­ல­வாய (கொமன்வெல்த் போட்­டிகள்) விளை­யாட்டுப் போட்­டி­க­ளுக்­கான எலி­சபெத் மகா­ரா­ணியின் செய்­தியை தாங்­கிய கோல் உலகம் முழுக்க பய­ண­மாகி இறு­தி­யாக போட்­டிகள் நடை­பெறும் கோல்ட் கோஸ்ட் நக­ரை வந்­த­டைந்­தது.

385 நாட்­க­ளாக கிட்­டத்­தட்ட ஒரு­வ­ரு­டத்­துக்கும் அதி­க­மான காலம் உலகம் முழுக்க பய­ணித்த மகா­ரா­ணியின் செய்தி அடங்­கிய பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா­வுக்­கான மகா­ராணி­யின் கோலா­னது தற்­போது கோல்ட் கோஸ்ட் வந்­த­டைந்­துள்­ளது. வீதி­களின் இரு மருங்­கிலும் மக்கள் கூடி­நின்று அதனை வர­வேற்க அவுஸ்­தி­ரே­லிய நாட்டு வீர, வீராங்­க­னைகள் கோலுடன் நகர்­வலம் வந்­தனர். 

21 ஆவது பொது­ந­ல­வாய விளை­யாட்டுப் போட்­டிகள் நாளை அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஆரம்­ப­மா­க­வுள்­ளன. 1930ஆம் ஆண்டு பிரித்­தா­னி­யாவில் நடை­பெற்ற முத­லா­வது பொது­ந­ல­வாய விளை­யாட்டுப் போட்­டி­யின்­போது பொது­ந­ல­வாய நாடு­களின் தலைவி என்ற வகையில் எலி­சபெத் மகா­ராணி விடுத்த செய்­தியைக் கொண்ட கோல் முதன்­மு­த­லாக அப்­போ­துதான் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனாலும் இக் கோல் 1998ஆம் ஆண்டு மலே­சி­யாவில் நடை­பெற்ற பொது­ந­ல­வாய போட்­டி­க­ளின்­போதே பிற­நா­டு­களுக்கு கொண்டு செல்லும் சம்­பி­ர­தாயம் ஆரம்­ப­மா­னது. 

டைட்­டா­னி­யம், மரம் மற்றும் கிரானைட் உட்­பட பல பொருட்­களைக் கொண்டு கைகளினா­லேயே வடி­வ­மைக்­கப்­பட்ட தற்­போ­தைய கோல் 1958ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அன்றிலிருந்து அக் கோலானது பொது­ந­­ல­வாய அங்­கத்­துவ நாடுகள் அனைத்­துக்கும் பயணம் செய்து இறுதி நாட்­களில் போட்டி நடை­பெறும் நக­ரத்­துக்குக் கொண்டு வரப்­படுவது வழமை.

அந்­த­வ­கையில் இம்­முறை பொது­ந­ல­வாய விளை­யாட்­டுக்­க­ளுக்­கான கோலா­னது கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி தனது பய­ணத்தை ஆரம்­பித்­தது. ஒரு­வ­ருட கால­மாக நடைபெற்ற மகா­ரா­ணியின் கோலை ஏந்­திய பயணம் மொத்­த­மாக 2,30,000 கிலோ­மீற்றர் பயணம் செய்­துள்­ளது. கரி­பியன் தீவுகள், ஆபி­ரிக்­கா, வட அமெ­ரிக்­கா, ஐரோப்­பா, ஆசியா என உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும்  எடுத்­துச்­செல்­லப்­பட்­டுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்கு அடுத்து உலகில் நடத்­தப்­படும் மிக்­பெ­ரிய விளை­யாட்டு விழா­வாகக் கரு­தப்­படும் இந்த பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் இம்­முறை 71 நாடு­களைச் சேர்ந்த 6,600 வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்­று­கின்­றனர். 

பொது­வாக கோல்ட் கோஸ்ட் நகரில் தற்­போது மழை­யுடன் கூடிய கால­நி­லையே காணப்­ப­டு­கின்­றது. காலை­ மு­தலே மழை ஆரம்­பித்து விடுவதால் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளவும் சிரமப்படுகின்றனர். அதேவேளை காலநிலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள எதிர்வுகூறலில் ஒரு வாரத்துக்கு மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்றும் போட்டிகளின் ஆரம்ப விழாவின்போதும் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.