யாழில் இருந்து மான்னாருக்கு 6 ரூபாய் 50 சதம் 

Published By: Robert

02 Apr, 2018 | 02:23 PM
image

ரி.விரூஷன்

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு செல்வதற்கு 6 ரூபாய் 50 சதம் பயண சீட்டை கொடுத்தமை, பயணிகளுக்கு பயண சீட்டை வழங்காமை, கணக்கிற்கு அதிகமாகவும், குறைவாகவும் பயண சீட்டு பணங்களை வைத்திருந்தமை முதலான குற்றச்சாட்டுக்களின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் மீள பணியில் அமர்த்த யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டதாக உள்ளக விசாரணைகளினூடாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்தியத்தில் பணியாற்றும் 5 நடத்துனர்களை இலங்கை போக்குவரத்து பணி இடைநிறுத்தம் செய்தது. இந் நடவடிக்கைக்கு எதிராக குறித்த 5 நடத்துனர்களும் தமக்கு மீள பணி வழங்கப்பட வேண்டும் எனவும், நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் நிலுவை பணம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி தொழில் நியாசபை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இவ் வழக்கில் 5 நடத்துனர்களது கோரிக்கையும் ஏற்ற தொழில் நியாயசபை அவர்களுக்கு சார்பான தீர்ப்பொன்றை வழங்கியது. இத் தீர்ப்பு எதிராக வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது. இவ் வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் வழங்கப்பட்டது.

இதன்போது, குறித்த குற்றச் சம்பவங்களானது பாரதுரமான குற்றமாகும். அரச பணத்தை திருடுவது என்பது பாரதுரமான குற்றமாகும். இதில் குறித்த ஐவருக்கு எதிராக துர்நடத்தை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் நீதிமன்றம் சலுகை அடிப்படையில் இச் செயலை தவறு என்று கருதி மிக கடுமையான எச்சரிக்கையுடன் மீள சேவையில் ஈடுபடுத்த அனுமதிப்பதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

ஆயினும் தொழில் நியாசபை வழங்கிய தீர்ப்பில் பகுதியளவில் திருந்தங்களை மேற்கொண்டு குறித்த ஐவருக்கும் நஷ்ட ஈடுகள் வழங்கப்படாமலும் மிகுதி பணம் வழங்கப்படாமலும் தொடர்ந்து சேவையில் ஈடுபட நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37