(எம்.எப்.எம்.பஸீர்)

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகன், லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வெளிப்படுத்திய கடற்படை றக்பி அணி வீரர்கள் நால்வர் அணியில் இருந்து உடனடியாக இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

 தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில்  இராணுவ விளையாட்டுக் கழக அணிக்கும் கடற்படை விளையாட்டுக் கழக அணிக்கும் இடையில்  றக்பி போட்டி இடம்பெற்றது. 

இந்நிலையில்   கடற்படை அணியின் முன்னாள் தலைவரான லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக “YOO7” என அச்சிடப்பட்ட கை பட்டிகளை அணிந்து விளையாடிய நால்வரே இவ்வாறு கடற்படை விளையாட்டுக் கழகத்தில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அகரம் அலவி கேசரிக்கு தெரிவித்தார்.