இளைஞர், யுவ­தி­களின் ஒற்­று­மையை பாது­காத்துக் கொள்ள வேண்டும். அதனை பிள­வு­ப­டுத்­தவோ இல்­லாமல் செய்யவோ யாருக்கும் இட­ம­ளிக்கக்கூடாது. இன ஐக்­கியத்தை பாதிக்கும் கருத்­துக்கள் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வு­செய்யும் வழி­களை இல்­லா­ம­லாக்­க ­வேண்டும். கண்டி பிர­தே­சத்தில் இடம்­பெற்ற பிரச்­சி­னைக்கும் இது பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தது என பிர­தமர் ரணில் விக­்கிர­ம­சிங்க தெரி­வித்தார்.

குரு­ணாகல் நிக­வ­ரெட்­டிய பிர­தே­சத்தில் இடம்­பெற்ற யொவுன்­புர நிகழ்ச்­சியின் இறு­திநாள் நிகழ்வு நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

யொவுன்­புர நிகழ்­வுக்கு பல இன,மதங்­களைச் சேர்ந்த இளை­ஞர்கள், யுவ­திகள் இங்கு குழு­மி­யி­ருக்­கின்­றனர். எந்த மதத்தை, இனத்தை  சேர்ந்­த­வர்­க­ளா­னாலும் நீங்கள் அனை­வரும் இந்த இடத்­துக்கு வந்­தி­ருப்­பது அனை­வரும் ஒன்­றி­ணைந்து ஐக்­கி­யப்­பட்டு அந்த ஐக்­கி­யத்­துடன் மீண்டும் திரும்பிச் செல்­வ­தற்­காகும்.

மேலும் வடக்கு, கிழக்கு  மற்றும் ஏனைய பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து யொவுன்­புர நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருக்கும் இளைஞர், யுவ­தி­க­ளு­ட­னான ஒற்றுமையை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனை பிளவுபடுத் தவோ இல்லாமல் ஆக்குவதற்கோ யாருக் கும் இடமளிக்கக்கூடாது.