அமெ­ரிக்­கா­விற்குள் பிர­வே­சிக்க விசா பெறு­வ­தற்கு விண்­ணப்­பிப்­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளது  பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்­ள­டங்­க­லான சமூக வலைத்­த­ள தகவல்களை  பெற்றுக்கொள்ளும் செயற்­பாட்டை ஆரம்­பிக்க விரும்­பு­வ­தாக  அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் அர­சாங்கம் தெரி­விக்­கி­றது.

அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இந்தப் பிரே­ர­ணை யின் பிர­காரம் பெரும்­பா­லான விசா விண்­ணப்­ப­தா­ரிகளிடம் தமது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணை­யத்­தள பக்­கங்கள் தொடர்­பான விப­ரங்­களை  வழங்கக் கோரப்­படும்.

இதன் கீழ் விண்­ணப்­ப­தா­ரிகள் கடந்த 5 வருட காலத்­தி­லான  அனைத்து சமூக ஊட­கங்கள் தொடர்­பான தமது ஆள­டை­யா­ளப்­ப­டுத்­தல்­களை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்கும்.

 மேற்­படி பிரே­ர­ணை­களால் வரு­ட­மொன்­றுக்கு சுமார் 14.7  மில்­லியன் பேர் பாதிப்பை எதிர்­கொள்­ள­வுள்­ளனர்.

இந்த சமூக வலைத்­த­ளங்கள் பற்­றிய  தக­வல்கள்  குடி­யேற்­ற­வா­சிகள் மற்றும் குடி­யேற்­ற­வா­சிகள் அல்­லாதோர் ஆகிய இரு தரப்­பினர் தொடர்­பிலும் ஆள­டை­யாளம் காணவும்  பரி­சீ­ல­னையை மேற்­கொள்­ளவும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

இதன்­போது விண்­ணப்­ப­தா­ரி­க­ளிடம் அவர்­களால் ஐந்து வருட காலப் பகு­தியில் பயன்­ப­டுத்­தப்­பட்ட கைய­டக்கத் தொலை­பேசி இலக்­கங்கள், இலத்­தி­ர­னியல் அஞ்­சல்கள் மற்றும் பயண வர­லாறு என்­ப­ன­வற்றை வெளிப்­ப­டுத்தக் கோரப்­படும்.

அத்­துடன் அவர்கள் எந்­த­வொரு நாட்­டி­லு­மி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டார்­களா அல்­லது அவர்­களின் உற­வி­னர்கள் எவ­ரா­வது தீவி­ர­வாத செயற்­பாட்­டுடன் தொடர்­பு­பட்­டுள்­ளார்­களா என்­பன குறித்தும் வின­வப்­படும்.

அதே­ச­மயம்  விசா­வின்றி அமெ­ரிக்­கா­வுக்கு பயணம் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பிரித்­தா­னியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்­மனி ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் இந்தப் புதிய பிரே­ர­ணையால் பாதிக்­கப்­பட மாட்­டார்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்க விசாவைப் பெறு­வது தொடர் பில் மேற்­படி விதி­வி­லக்கைப் பெறாத நாடு­க­ளான இந்­தியா, சீனா மற்றும் மெக்­ஸிக்கோ ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் அமெ­ரிக்­கா­வுக்கு  பணி­யாற்­றவோ அன்றி விடு­மு­றையைக் கழிக்­கவோ விசா பெற முயற்­சிக்­கையில் புதிய பிரே­ர­ணையால் குழப்ப நிலை ஏற்­படும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்தப் புதிய பிரே­ரணை தீவி­ர­வா­தி­களை அடை­யாளம் காண  பெரிதும் உதவும் என அமெ­ரிக்க அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

2015 ஆம் ஆண்டு அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்­தி­லுள்ள சான்­பி­ரான்­சிஸ்­கோவில்  இடம்­பெற்ற 14 பேரைப் பலி கொண்ட   துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது    தாக் குதல்தாரிகளுக்கிடையே சமூகவலைத் தளங் களினூடாக  அடிப்படைவாத செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தன.

அந்த செய்திகளை உரிய நேரத்தில் கண் டறிந்திருந்தால் அந்தத் தாக்குதலை தவிர்த் திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.