பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு  எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்து  பிர­த­மரை காப்­பாற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நட­வ­டிக்கை எடுத்தால் அது கூட்­ட­மைப்­புக்கே பாத­க­மாக அமையும். பிர­தமர் ரணி­லுடன் இணைந்து ஒரு­போதும் இனப்­பி­ரச்­சி­னைக்கு  தீர்வைக் காண முடி­யாது என்­ப­தனை  கூட்­ட­மைப்பு புரிந்­து­கொள்­ள­வேண்டும் என்று சிறி­லங்கா சுந்­திரக் கட்­சியின்  முக்­கி­யஸ்­தரும் அமைச்­ச­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 

Image result for தயாசிறி

பிர­த­மரை காப்­பாற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நட­வ­டிக்கை எடுத்தால் நாங்கள் எதிர்க்­கட்­சி­யா­கி­வி­டுவோம். எதிர்க்­கட்சி தலைவர் பத­வி­யையும்  எதிர்க்­கட்­சியின் பிர­தம கொறடா பத­வி­யையும் பெற்று  நாம்  எதிர்க்­கட்சி பக்கம் சென்­று­வி­டுவோம் என்றும்  அவர் குறிப்­பிட்டார். 

எனவே பிர­த­மரை பாது­காக்க தமிழ்க் கூட்­ட­மைப்பு முன்­வ­ராமல் எதிர்க்­கட்­சி­யாக நடந்­து­கொள்­ள­வேண்டும். கரு ஜய­சூ­ரிய  அல்­லது ரஞ்சித் மத்­தும பண்­டார போன்ற ஒரு­வரை  பிர­த­ம­ராக நிய­மித்து தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து,      விரைவில்  இனப்­பி­ரச்­சி­னைக்கு  தீர்­வைக்­காண முடியும்.  எனவே  கூட்­ட­மைப்பு  இதனை புரிந்­து­கொண்டு  எதி­ர­வரும் நான்காம் திகதி  முடி­வெ­டுக்கும் என்று நம்­பு­கின்றோம் எனவும் தயா­சிறி ஜய­சே­கர குறிப்­பிட்டார். 

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு  எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான விவா­தமும் வாக்­கெ­டுப்பும் எதிர்­வரும் நான்காம் திகதி  பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.  இந்­நி­லையில் இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்­பின்­போது   தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு  எவ்­வா­றான  முடிவை எடுக்­கப்­போ­கின்­றது என்­பது குறித்து அனை­வரும் எதிர்­பார்த்­துள்ள நிலை­யி­லேயே  சிறி­லங்கா சுந்­திரக் கட்சி இந்த கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளது.  

இது தொடர்பில்   சிறி­லங்கா சுந்­திரக் கட்­சியின்  முக்­கி­யஸ்­தரும் அமைச்­ச­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர மேலும் குறிப்­பி­டு­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த நாட்டின்  பிர­தான எதிர்க்­கட்சி என்ற வகையில்  தனது வகி­பா­கத்­தையும் அர­சியல் கதா­பாத்­தி­ரத்­தையும் உரிய முறையில் செய்­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக உள்­ளது. குறிப்­பாக  மத்­திய வங்கி பிணை­முறி   மோசடி விவ­கா­ரத்தில்  தமிழ்க் கூட்­ட­மைப்பு  தனது  அர­சியல் வகி­பா­கத்தை உரிய முறையில் முன்­னெ­டுக்­க­வில்லை.  இது தொடர்பில் நாங்கள் கூட கவ­லை­ய­டை­கின்றோம்.  

இந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு  எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை   பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.  அது தொடர்­பான விவா­தமும்  வாக்­கெ­டுப்பும் எதிர்­வரும்  நான்காம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. 

இந்த வாக்­கெ­டுப்­பின்­போது  பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கவே   சுதந்­திரக் கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.  எனினும்    நாம் பிர­த­மரை எதிர்க்­கும்­போது நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்து  பிர­த­மரை காப்­பாற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நட­வ­டிக்கை எடுத்தால் அது கூட்­ட­மைப்­புக்கே பாத­க­மாக அமையும் என்­ப­தனை  அக்­கட்சி  மனதில் கொள்­ள­வேண்டும். 

அதா­வது நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்து  பிர­த­மரை காப்­பாற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நட­வ­டிக்கை எடுத்தால் நாங்கள் எதிர்க்­கட்­சி­யா­கி­வி­டுவோம். எதிர்க்­கட்சி தலைவர் பத­வி­யையும்  எதிர்க்­கட்­சியின் பிர­தம கொறடா பத­வி­யையும் பெற்று  நாம்  எதிர்க்­கட்சி பக்கம் சென்­று­வி­டுவோம்.  

அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­ம­லான அர­சாங்­கத்­துடன் இணை­வ­துடன் அவர்கள் அர­சாங்­கமே உரு­வாகும். ஆனால்  இவ்­வாறு ஐக்­கிய தேசிய கட்­சியும்  தமிழ்க் கூட்­ட­மைப்பும் இணைந்து அமைக்கும்  அர­சாங்­கத்­தினால் ஒரு­போதும்    தேசிய பிரச்­சி­னையை தீர்க்க முடி­யாது என்­ப­தனை   கூட்­ட­மைப்பு    மறந்­து­வி­டக்­கூ­டாது. 

தென்­னி­லங்கை மக்கள்  ஒரு­போது ஏற்க மாட்­டார்கள் ஐக்­கிய தேசிய கட்­சியும்  தமிழ்க் கூட்­ட­மைப்பும் இணைந்து அமைக்கும்  அர­சாங்­கத்தை தென்­னி­லங்கை மக்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்­டார்கள்.   இவர்­க­ளினால் தேசிய பிரச்­சி­னைக்­கான   தீர்வு உள்­ள­டங்கும்   புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வர முடி­யாது. ஏற்­க­னவே ஏக்­கிய, ஒரு­மித்த என்ற வச­னங்­களை போட்டு   கடந்த தேர்­தலில்  பாடம் கற்­பிக்­கப்­பட்­டது. 

அதனால்  ஐக்­கிய தேசிய கட்­சியும்  தமிழ்க் கூட்­ட­மைப்பும் இணைந்து அமைக்கும்  அர­சாங்­கத்தில்   தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு  தீர்­வைக்­காண முடி­யாது.   இது  கூட்­ட­மைப்­புக்கு வடக்­கிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.    கூட்­ட­மைப்­பினால்  வடக்கு கிழக்கு மக்­க­ளுக்கு  தேவை­யா­னதை  சிறி­த­ளவும் வழங்க முடி­யாமல் போய்­விடும். 

சிங்­கள பௌத்த மக்கள் எப்­போதும் ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­கவே இருப்­பார்கள். எனவே இந்த அனைத்து விட­யங்­க­ளையும்   மனதில் கொண்டு அர­சியல் ரீதியில்  சிந்­தித்து  எதிர்­வரும் நான்காம் திகதி   தமிழ்க் கூட்­ட­மைப்பு  தீர்­மானம் எடுக்­க­வேண்டும். 

இந்த இடத்தில்  கூட்­ட­மைப்பு   ஒரு  எதிர்க்­கட்சி என்ற அந்­தஸ்தில் இருந்து செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.    அதனால் கூட்­ட­மைப்பு நம்­பிக்­கை­யில்லா  பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பில்   பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளிக்கும் என்று எதிர்­பார்க்­கின்றோம்.    அடுத்து என்ன நடக்கும் என்­ப­தனை கூறி­விட்டோம். முடிவு  தமிழ்க் கூட்­ட­மைப்பின் கைக­ளி­லேயே உள்­ளது என்­ப­தனை வலி­யு­றுத்­து­கின்றோம். 

இதே­வேளை   கரு.ஜய­சூ­ரிய  அல்­லது ரஞ்சித் மத்­தும பண்­டார போன்ற ஒரு­வரை  பிர­த­ம­ராக நிய­மித்து தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து,      விரைவில்  இனப்­பி­ரச்­சி­னைக்கு  தீர்­வைக்­காண முடியும் என்­ப­த­னையும் கூட்­ட­மைப்­புக்கு கூற விரும்­பு­கின்றோம் என்றார். 

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை  கடந்த மாதம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யினால்   சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம்  கைய­ளிக்­கப்­பட்­டது.   அதன் பின்னர் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்  எதிர்வரும் நான்காம் திகதி  இந்த பிரேரணை குறித்து விவாதிக்கவும்   வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. 

அத்துடன்  வாக்கெடுப்பின்போது    இலத்திரனியல் முறை வாக்கெடுப்பை தவிர்த்து  பழைய முறையில் அதனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.  இதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு  ஆதரவாக வாக்களிக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துள்ளது.  சுதந்திரக் கட்சியும்  இதனை ஆதரிக்கும் என தற்போது  தெரிகின்றது.  இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும்   பங்காளிக் கட்சிகள் பிரதமரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.