துபாயில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக  சிகரட்டுக்களை கொண்டு வந்த இலங்கைப் பிரஜைகள் இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும் விமான நிலையத்தில் இருந்து வௌியேறும் போது சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 650,000 ரூபா பெறுமதியான  65 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 13,000 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

29 மற்றும் 42 வயதுடைய இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கொழும்பு மற்றும் மேல் கொட்டரமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரட்டுக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் ஒரு சந்தேகநபருக்கு 50,000 ரூபாவும் மற்றைய சந்தேகநபருக்கு 10,000 ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.