அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட கோழி ஒன்று 18 மாதம் உயிருடன் இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு கொலராடோ நாட்டில் "ஹெட் லெஸ் சிக்கன்" என்ற விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜீன் மாத தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டில் உள்ள ப்ரூடா நகரில் இந்த விழாவை கொண்டாடுகின்றனர். இந்த விழாவிற்கு முக்கிய காரணம் மைக் என்ற கோழியாகும்.
அதிசய மைக் எனப் பெயரிடப்பட்ட கோழி தலை துண்டிக்கப்பட்ட பிறகும் சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது. ஒருநாள் மைக்கின் உரிமையாளர் சமைப்பதற்காக அதன் தலையை துண்டித்துள்ளார். ஆனால் மைக் தலை துண்டிக்கப்பட்ட பிறகும் உயிருடன் இருந்துள்ளது. இதனை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
கோழியின் மூளையின் முக்கிய பகுதி பாதிக்கப்படாமல் இருந்ததால் கோழி உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் கோழிக்கு உணவானது சிறிய குழாய் மூலம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உணவுக்குழாயில் உணவு சிக்காமல் இருக்க நீரானது சிரஞ் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 18 மாதங்கள் மைக் உயிரோடு இருந்து வந்துள்ளது.
18 மாதங்களுக்கு பிறகு உணவுக்குழலில் உணவு சிக்கி மைக் உயிரிழந்தது. மைக்கை நினைவுகூறும் வகையில் "ஹெட் லெஸ் சிக்கன்" விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM