அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டவாறு இரண்டாவது நாளாகவும் இன்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் 500ற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்

டொரிங்டன் தோட்டத்தில் உள்ள தொழிலாளி ஒருவரை கடந்த மாதம் தோட்ட நிர்வாகம் வேலை நிறுத்தம் செய்தது. இவருக்கு தோட்ட அதிகாரி தொழில் தருவதாக பல முறை கூறி ஏமாற்றியதன் காரணமாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் உடனடியாக குறித்த தொழிலாளிக்கு தொழில் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். அத்தோடு தோட்ட அதிகாரியின் கொடும்பாவியும் ஆர்பாட்டகார்களால் எரியூட்டப்பட்டது.

இதேவேளை நேற்று குறித்த தொழிலாளி மண்னெண்ணையை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். எனினும் ஏனைய தொழிலாளர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.