களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மதுகம - கடுகஹஹேன  சொல்தர கடே சந்தி பிரதேசத்தில் டி56 ரக துப்பாக்கியொன்றும், 28 தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும் சந்தேக நபர்கள் மதுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் நீதி மன்றில் ஆஜர்படுத்த்ப்படவுள்ளனர்.