பொய்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து எம்மை தமிழ்க் கூட்டமைப்பு விடுவித்துள்ளது

Published By: Priyatharshan

31 Mar, 2018 | 10:35 AM
image

ஈ.பி.டி.பி. கட்சி ஒட்டுக்குழு என்றும், யுத்தக் குற்றம் புரிந்தவர்கள் என்றும், தமிழ் உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் என் றும் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வீண்பழி சுமத்திவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க எங்களை நாடியுள்ளது.

இந்த நிலைமையானது கூட்டமைப்பு, அந்த பொய் குற்றச்சாட்டுக்களில் இருந்து எங்களை விடுவித்துள்ளதுடன் ஈ.பி.டி.பி. கட்சியும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தான் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதே வெளிப்படையான உண்மையாகும் என்று யாழ்.மாநகர சபை உறுப்பினர் றெமிடியஸ் மற்றும் குபேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்ற  பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றங்களின் சில சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி கட்சி ஆதரவு வழங்கியதை வைத்து அவர்களுடன் எமது கட்சி கூட்டாட்சி அமைத்துவிட்டது என்று எண்ணிவிட வேண்டாம். ஈ.பி.டி.பி. கட்சியானது எப்போதும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாது. தொடர்ந்தும் அதன் கொள்கையின் வழியிலேயே பயணிக்கும்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஈ.பி.டி.பி. மீது வசை பாடுவதே வேலையாக செய்துவந்தது. இதனை எமது கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பல தடைவ கூறியுள்ளார்.

ஈ.பி.டி.பி. மீது யுத்தக்குற்றம், ஒட்டுக்குழு, தமிழ் உறவுகள் காணாமல் போகச் செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் என்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு எமது கட்சியின் ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

ஈ.பி.டி.பி.யும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தான் என்பதை ஏற்றுக் கொண்டு, இதுவரை காலமும் ஈ.பி.டி.பி. கட்சி மீது சுமத்திவந்த பெய்யான குற்றச்சாட்டுக்களில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களை விடுவித்துள்ளது. நாமும் தூய்மையான கரங்களை உடையவர்கள் தான் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00