முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கிஸ்தர்களில் ஒருவரும் அந்த கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான குமார் குணரட்னம் எதிர்வரும் 23ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது,கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ள குமார் குணரட்னம் வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 3ம் திகதி கேகாலை அங்குருவெல்லவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.