சீனாவில் 11 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த கியா செங்யாங்  என்ற நபர் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் என இதுவரை 11 பேரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறான்.

மேலும் குறித்த சந்தேக நபர்  மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரை சீன பொலிஸார் கைது செய்து விசாரணை செய்ததில் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளான்.

தனது தவறை ஒப்புக்கொண்டதையடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் நீதி மன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிக்கு  மரண தண்டனை விதித்து சீன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.