அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பத்தனை பகுதியில் இரு லொறிகள் நேருக்குநேர் மோதிவிபத்திற்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திம்புல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெரிகிளேயார் தோட்டப் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

அட்டனிலிருந்து நுவரெலியாவிற்கு மாட்டு சானம் ஏற்றிச்சென்ற லொறியுடன் தலவாக்கலையிலிருந்து கொட்டகலை நோக்கிச்சென்ற லொறி மோதுண்டதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தினால் படுகாயமடைந்த லொறியின் சாதியொருவர் கொட்டகலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .