செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிற நிலையில்  செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிர கணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக  ரோவர் விண்கலத்தில் ‘மாஸ்ட்கேம்’ என்ற கமேராவும் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்த படங்களை ஆராயும் நிபுணர்கள் அடிக்கடி  பல்வேறு விதமான யூகங்களையும்  வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு படத்தில் விலங்குகளின் தொடை எலும்புகள் கீழே கிடப்பது போன்று தோன்றுகிறது. படத்தைப் பார்த்த வேற்றுகிரகவாசிகள் பற்றி ஆராயும் நிபுணர்கள்,

"டைனோசர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து மறைந்து விட்டன. டைனோசருக்கும் முன்பே செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் வாழ்ந்து இருக்கலாம்" என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதற்கு பிறகு  ரோவர் அனுப்பிய புகைப்படம் ஒன்றில் பாறைகளுக்கு இடையே  எகிப்தில் இருப்பதை போன்ற பிரமிட்போன்ற தோற்றமுடைய ஒரு அமைப்பு இருந்து உள்ளது.

இது குறித்து வேற்றுகிரக உயிரினங்கள் குறித்து  ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் கூறும் போது,

"பண்டைய நாகரிகத்தினர்  கட்டிட அமைப்பான  பிரமிட்டைப்போல அது மிகவும் நேர்த்தியாக கட்டபட்டு உள்ளது. அது ஒளியின் தந்திரமாக தெரியவில்லை ஒரு அறிவார்ந்த கட்டிடமாக உள்ளது.

இந்த பிரமிட் கார் அளவில் உள்ளது. ஆனால் பெரிய அமைப்பு முறை செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் இருக்கலாம். இதனால் பண்டைய எகிப்து நாகரிகத்தினர் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து இருக்க கூடும்" என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். என்ற தகவலை வெளியிட்டனர்.

அடுத்த கட்டமாக  ரோவர் அனுப்பி உள்ள படத்தை ஆராய்ந்த நிபுணர்கள்,

"செவ்வாய்கிரக பாறைகளில் மனித எலும்பு வடிவங்கள் படிந்து இருக்கிறது. அது சிறிய வடிவிலான தலை மற்றும் சிறிய அளவிலான உடல் பகுதி மற்றும் இரண்டு குழந்தைகளின் கைகள் போல் எலும்புகள் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். அதே போன்ற அமைப்புடன் மற்றொரு  வடிவமும் காண்படுகிறது. இது பல மீட்டர் நீளம் உள்ளதாக உள்ளது" என கூறி இருந்தனர்.

இந் நிலையில் அண்மையில் ரோவர் அனுப்பி உள்ள படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரகணக்கான உயிரினங்கள்  மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது.

இது குறித்து சதி கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கூறும் போது,

"இது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதராமாகும்.  செவ்வாய் கிரகத்தில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க்கும் ஒரு நம்பிக்கையாகும் என்று நான் நம்புகிறேன்". என கூறியுள்ளார்.