பயங்கரவாத தாக்குதல்களுக்கு சிறுவர்கள் படையை அமைக்க முயற்சி : இங்கிலாந்து இளைஞருக்கு வாழ்நாள் சிறை

Published By: Digital Desk 7

29 Mar, 2018 | 04:30 PM
image

லண்டனில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சிறுவர்கள் படையை அமைக்க முயற்சி செய்த இங்கிலாந்து இளைஞருக்கு  வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனை சேர்ந்த 25 வயதான உமர் அகமது ஹக் என்பவர் முறையாகப் பயிற்சி பெறாமலேயே மதப்பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

குறித்த இளைஞர் மதப்பள்ளிக்கூடத்தில் மதக் கல்வியை போதிக்காமல் சிறுவர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய வீடியோ படம் காட்டி அவர்களை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு மூளைச் சலவை செய்து உள்ளார்.

அது மட்டுமல்லாது லண்டனில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர்களைக் கொண்டு ஒரு படையை அமைக்கவும் அவர் முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை நடாத்தியதில்  பயங்கரவாத செயற்பாடுகளோடு தொடர்புடைய அவரது இரு நண்பர்களும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் மீதும் பொலிஸாரால்  வழக்கு தொடரப்பட்டது.

நீதி மன்ற வழக்கு  விசாரணையின்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதான சந்தேக நபரான ஆசிரியருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், அவருடைய நண்பர்களில் ஒருவருக்கு  13 ஆண்டுகளும், மற்ற நண்பருக்கு  4 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13