இந்தியாவின் அருணாசலபிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சிறுமியை பாலியல்  பலாத்காரம் செய்த 2 இளைஞர்களை அக் கிராம மக்கள்  நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாசலபிரதேசத்தில் உள்ள யிங்கி ஓங் என்ற  கிராமத்தில்  உள்ள 17 வயது பெண்ணை  அவரது நண்பர் உட்பட 4  இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 

தகவலறிந்த கிராம மக்கள் குறித்த இளைஞர்கள் இருவரையும் சூழ்ந்து, அவர்களின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தெருவில் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

நிர்வாண ஊர்வலத்தின்  பின்னர் அங்குள்ள பொலிஸ்  நிலையத்தில் இளைஞர்கள் இருவரையும் கிராம மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுடன் குற்றவாளிகளில் ஒரு இளைஞர் சமூக வலைதளத்தில் நட்பு வட்டத்தில் இருந்துள்ளார். இந் நிலையில் அந்த  இளைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இளம்பெண் அவரை நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் தமது 3 நண்பர்களுடன் இணைந்து குறித்த பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

2 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் எஞ்சிய இருவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.