வெனிசுலா நாட்டின் வாலன்சியா நகரில் உள்ள  சிறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 68 பேர் பலியாகி உள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் நிலையத்துடன் இணைந்து காணப்படும் கரபோபோ சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தப்பிச்செல்லும் நோக்கில் கட்டில் மெத்தைகளுக்கு தீ வைத்தபோதே கைதிகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் நேற்று  கலவரம் வெடித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இக்கலவரத்தில் கைதிகளுடன் கைதிகளைப் பார்வையிடவந்த பெண்கள் இருவரும் உயிரிழந்ததாகவும்  பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும் கலவரத்தின்போது பொலிஸ் நிலையத்தைச் சுற்றிவளைத்த மக்களைப் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

சிறைச்சாலையினுள் பரவிய தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதோடு  கலவரத்தை பொலிஸார்  கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து விரிவான விசாரணையை  ஆரம்பித்துள்ளனர்.