பாரா­ளு­மன்­றங்­களின் ஒன்­றி­யத்தின் 138 ஆவது மாநாடு சுவிற்­சர்­லாந்தின் ஜெனிவா நகரில் நடை­பெற்று வரு­கின்­றது. இந்த மாநாடு கடந்த 24 ஆம் திகதி ஆரம்­ப­மாகி நடை­பெற்று வரு­கின்­றது.

இம்­மா­நாட்டில் சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் இலங்­கையில் இருந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு சென்­றுள்­ளது. நீடித்து நிலைக்­கக்­கூ­டிய அபி­வி­ருத்­தியை அடை­வ­தற்கு நிலை­யான அமை­தியை ஒரு வாக­ன­மாக்­கிக்­கொள்­வது, சட்­டத்­துக்குப் புறம்­பான குடி­யேற்­றங்­களால் உலகு எதிர்­கொள்ளும் சவாலில் பாரா­ளு­மன்­றங்­களின் பங்­க­ளிப்பைப் பலப்­ப­டுத்­து­வது போன்ற நோக்­கங்­க­ளுக்­காக இந்த ஒன்­றியம் பணி­யாற்றி வரு­கின்­றது. 

138ஆவது மாநாட்டில் நேற்றைய தினம் நிலை­யான அபி­வி­ருத்தி இலக்­குகள் என்­பது தொடர்­பான குழு நிலை விவாதம் நடை­பெற்­றது. விவா­தத்தை முன்­ன­கர்த்­திய 5 பேர் அடங்கிய குழுவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஈ.சர­வ­ண­ப­வனும் கலந்­து­கொண்டார். 

சேர்­பிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மிலோர்ட் மிஜா­டோவிக், ஆர்­ஜென்­ரீனா செனட்டர் லுசிலா கிறசெல், லிசொதோ செனட்டர் பீட் லிசா­ஓனா பீட் மற்றும் ஐக்­கிய நாடுகள் சபையைச் சேர்ந்த நாடியா இஸ்நர் ஆகி­யோரும் இந்தக் குழுவின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தனர். நிலைத்

்தன்மை மற்றும் நெகிழ்திறன் கொண்ட சமூகத்தை நோக்கிய மாற்றம் என்கிற தலை

ப்பில் நேற்றைய விவாதம் இடம்பெற்றது.