அணி தலைவி பிஸ்மா மரூப்பினை தலைமையாக கொண்ட பாகிஸ்தானிய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் மேற்கொண்டது. 

பாகிஸ்தானிய பெண்கள் அணியானது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பெண்களுக்கான  சம்பியன்ஷிப் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு வருகைதந்துள்ளது. 

ஒருநாள் போட்டிகளை தவிர்த்து இரு அணிகளும் மூன்று இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடவுள்ளன. 

இலங்கையை எதிர்கொண்ட  மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தானிய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளதுடன், இருபதுக்கு - 20 போட்டிகளும் முறையே கொழும்பு எஸ்.எஸ்.சி.(மார்ச் 28) என்.சி.சி .(மார்ச் 30)  மற்றும் எஸ்.எஸ்சி .(மார்ச் 31)  ஆகிய மைதானங்களில் இடம்பெறவுள்ளன. 

இவ்வணியினை வரவேற்கையில் பதில் உயர் ஸ்தானிகர் ஜான் பாஸ் கான், வாழ்த்துக்களை பாகிஸ்தானிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தெரிவித்தார். 

எதிர்வரும் போட்டிகளிலும் தங்களது நாட்டிற்கு கௌரவத்தினை பாகிஸ்தானிய பெண்கள் அணியினர் பெற்றுத்தருவர் என இதன்பொழுது நம்பிக்கை தெரிவித்தார்.