சுங்கத் திணைக்களத்துக்கு இணைய கொடுப்பனவு கட்டமைப்பை அறிமுகம் செய்துள்ள செலான் வங்கி

Published By: Priyatharshan

28 Mar, 2018 | 05:46 PM
image

ஒப்பற்ற டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளை வழங்கும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் செலான் வங்கி, தனது இணைய வங்கிச் சேவை வசதிகளை மேம்படுத்தி, தனது தனிநபர் மற்றும் கூட்டாண்மை (Retail & Corporate) வாடிக்கையாளர்களுக்கு இலங்கை சுங்கத்துடன் இலகுவான முறையில் இணையத்தினூடாக கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனூடாக பாரம்பரிய கொடுப்பனவு முறையை மாற்றியமைத்துள்ளதுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு தன்னியக்கமான உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும் இணைய கொடுப்பனவு தீர்வை வழங்கியுள்ளது. மேலும், புதிய கட்டமைப்பினூடாக, இலங்கை சுங்கத்துக்கு செலுத்தப்படும் கட்டணத்துக்கு கையாளல் கட்டணமாக 50 ரூபாய் மட்டுமே அறவிடப்படுவதனூடாக, பாரம்பரியமாக அறவிடப்படும் காசாளார் ஆணை கட்டணமான 250 ரூபாயும் இல்லாமல் செய்யப்பட்டள்ளது.

LankaClear இன் LankaPay இணைய கொடுப்பனவு கட்டமைப்பினூடாக வலுவூட்டப்படுவதுடன் செலான் வங்கியின் இணைய வங்கிச் சேவையூடாக கொடுப்பனவு மேற்கொள்ளப்படும் போது, அது இலங்கை சுங்கத்தின் வங்கிக் கணக்கில் LankaPay இன் Common Electronic Fund Transfer Switch (CEFTS) கட்டமைப்பினூடாக உடனடியாக நேரடியாக வைப்புச் செய்யப்படுகிறது. CEFTS என்பது செலவு குறைந்த, உயர் பாதுகாப்பான இலத்திரனியல் கொடுப்பனவு வலையமைப்பு என்பதுடன், CEFTS உடன் கைகோர்த்துள்ளதனால் செலான் வங்கிக்கு ஒப்பற்ற வங்கி அனுபவத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான முறையில் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பில் செலான் வங்கியின் செயற்பாடுகளுக்கான பதில் பொது முகாமையாளர் மலிக் விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

 “எமது தனிநபர் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்கள், கிளை ஒன்றுக்கு விஜயம் செய்யாமல், சௌகரியமாக தமது கொடுக்கல் வாங்கல்களை தாமே முன்னெடுக்க வலுவூட்டும் வகையிலான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பாரிய திட்டத்தின் ஒரு அங்கமாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

இந்த கொடுப்பனவு தீர்வை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, தனியார் வங்கிகளில் கணக்கை பேணியிருந்த ஏற்றுமதியாளர்களுக்கு அல்லது இறக்குமதியாளர்களுக்கு சிரமமான படிமுறையை பின்பற்ற வேண்டியிருந்தது.

தமது வங்கியிலிருந்து காசாளர் கட்டளையை பெற்று, அதனை இரு அரச வங்கிகளுக்கு கொண்டு சென்று மற்றுமொரு கொடுப்பனவு ஆணையை இலங்கை சுங்கத்துக்காக பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது” என்றார்.

செலான் வங்கி நவீன பாதுகாப்பு மெருகேற்றங்களை பதிவு செய்துள்ளதுடன் அதனூடாக மேற்கொள்ளப்படும் சகல டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களிலும் உயர் பாதுகாப்பு மற்றும் தங்கியிருக்கக்கூடிய தன்மை போன்றன உறுதி செய்யப்படுகின்றன. டிஜிட்டல் மயப்படுத்தல் செயன்முறைக்கமைய நவீன தொழில்நுட்பங்களை செலான் வங்கி அறிமுகம் செய்து வருவதுடன் அதனூடாக பாரம்பரிய கொடுக்கல் வாங்கல் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வங்கியியல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57