(நா.தினுஷா)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார குழுவினை உடனடியாக இரத்து செய்வதுதொடர்பான ஜனாதிபதியின் பணிப்புரை வரவேற்கத்தக்கதெனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, பொருளாதார குழுவினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததே தவிர  எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பிரதமர் தலைமையிலான பொருளாதார குழுவினை உடனடியாக இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.