உலகிலேயே அற்புதமான ஒன்று காதல் என்பதைக் கொண்டாடும் தினமான பிப்ரபரி 14ந் திகதி அன்று சினிமாவிலும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடந்தேறியது.

எப்பொழுதும் இசை ஆல்பம் வெளியீடு மக்கள் கூடியிருக்கும் பொது இடங்களில் நடப்பது அரிது. அதுவும் காதல் இசை ஆல்பம் வெளியீடு என்றால் சொல்ல வேண்டுமா!

இதோ! காதலர் தினமான பிப்ரபரி 14ந் திகதி அன்று எம் கியூப் ஆட் கிரியேட்டர்ஸ் சார்பில் ஒரு செல்லுலாயிட் காதல் என்ற புதிய இசை ஆல்பம் வெளியீடு சென்னை வட பழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் 2000 இற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் குறிப்பாக காதலர்கள் குழுமியிருக்க அமர்க்களமாக, காமெடி கலந்த கலகலப்புடன் காதல் சுகுமார் வெளியிட நடன இயக்குனர் காதல் கந்தாஸ் இசை ஆல்பத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் காதல் ஜோடிகள், திருமணமான  தம்பதிகள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆர்வத்துடன் பலவித போட்டிகளில் கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்வித்தினர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் காதல் கந்தாஸ் மற்றும் காதல் சுகுமார் பரிசுகளை அளித்து ஊக்கப்படுத்தினர்.

இடையிடையே ட்விஸ்ட் அண்ட் டேர்ன்ஸ் நடன குழுவின் அற்புதமான ஆட்டம் குழுமியிருந்த மக்களுக்கு மேலும் உற்சாகத்தை தந்தது. 

இந்த இசை ஆல்பம் பிரபல நகைச்சுவை நடிகை பிந்துகோஷின் மூத்த மகன் திருக்குமரன்.ஆர் எண்ணத்திலும் இயக்கத்திலும் உருவானது. 

மீனாட்சி சுந்தரத்தின் வரிகளுக்கு மகியின் காதல் இசைக்கு பிந்துகோஷின் இளையமகன் சிவாஜி.ஆர் நடனம் அமைத்துள்ளார். காதல் காலம் படத்தில் நடித்துள்ள ஹீரோ சந்துரு மற்றும் ஹீரோயின்  சார்வி இருவரும் இந்த ஆல்பத்திலும் இணைந்து நடித்துள்ளனர். 

இந்த ஆல்பத்தின் படமாக்கலை எல்லோரும் பாராட்டினர். அப்படியே எடுத்து படத்தில் ஒரு பாடலாக வைத்துவிடலாம் எனக் குறிப்பிட்டனர்.

மக்கள் தொடர்பாளர் ஜான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை காமெடி கலந்த கலாட்டாவாக கலக்கப் போவது யாரு  புகழ் ரக்‌ஷன் மற்றும் சுமையா தொகுத்து வழங்கினார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்