பெற்றோலிய,சுரங்க மற்றும்  போக்குவரத்து போன்ற  தொழிற்றுறைகள் காரணமாக  சூழலுக்கு விடுவிக்கப்படும் காபன்  மாசுக்களே  காலநிலை மாற்றத்திற்கு    பிரதான காரணியாகவுள்ளதாக   நம்பப்படுகின்ற நிலையில்  ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளால்  வெளியிடப்படும் காபனீரொட்சைட்டால்   காலநிலை மாற்றம்  ஏற்படும் அச்சுறுத்தல்  உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

கையடக்கத் தொலைபேசிகள் காரணமாக  2010  ஆம் ஆண்டுக்குள் 125  மெகா தொன்  காபனீரொட்சைட் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளதாக  நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர். இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் கிளீனர் புரொடக் ஷன் ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளன.

 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள், டப்லட் கணினிகள்,  மடிகணினிகள்  மற்mobileறும் மேசைக் கணினிகள் என்பவற்றால்  உலகம்  வெப்பமடைவதாகத் தெரிவித்த  கனேடிய மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்  லொப்ரி பெல்கிர்,  தரவு நிலையங்கள்  மீளப் புதுப்பிக்கக் கூடிய சக்தி வளத்தில் இயக்கப்படுவது அவசியமாகவுள்ளதாக கூறினார்.

  மேற்படி கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினிகள் பாவனையை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்பத்  துறையின்  உலகளாவிய வளர்ச்சியானது 2020  ஆம் ஆண்டிற்குள் 3.5  சதவீதமாகவும் 2040 ஆம் ஆண்டிற்குள் 14  சதவீதமாகவும் வளர்ச்சியடையும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பிரகாரம் உலகளாவிய போக்குவரத்துத் துறையால் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு பங்களிப்புச் செய்யப்படும்  காபன் அளவுடன் ஒப்பிடுகையில் அரை மடங்கிற்கும் அதிகமான காபன்  வெளியீடு  மேற்படி தகவல் தொழில்நுட்பத் துறையால் மேற்கொள்ளப்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தத் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களில்  கையடக்கத் தொலைபேசிகளின் பாவனையானது 2010  ஆம் ஆண்டுக்கும் 2020  ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் 11  சதவீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில்  அந்தக் காலப்பகுதியில் கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை மூலம்  வருடமொன்றுக்கு 17   மெகா தொன்னிலிருந்து 25  மெகா தொன் காபனீரொட்சைட் சுற்றுச் சூழலுக்கு விடுவிக்கப்படும் அபாயம் உள்ளதாக  நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.