கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் ஞாயி­றன்று நடைபெற்ற டயலொக் சம்­பியன்ஸ் லீக் சுப்பர் – 8 கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் இரா­ணுவம் இல­கு­வான வெற்­றியைப் பெற, கடற்­படை கடைசிக் கட்­டத்தில் வெற்­றியை சுவைத்­தது.திடீர் வீழ்ச்சி அடைந்­துள்ள ஜாவா லேன் அணிக்கு எதி­ராக நடை­பெற்ற போட்­டியில் இடை­வே­ளைக்குப் பின்னர் ஆதிக்கம் செலுத்­திய இரா­ணுவ அணி 4–1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் இல­கு­வாக வெற்­றி­பெற்­றது.


இப் போட்­டியின் முத­லா­வது பகு­தியில் ஜாவா லேனிடம் சவாலை எதிர்­கொண்ட இரா­ணுவ அணி ஒரு கோலை மாத்­திரம் போட்­டி­ருந்­தது. ஆனால் இடை­வே­ளையின் பின்னர் திற­மை­யாக விளை­யா­டிய இரா­ணுவ அணி மேலும் 3 கோல்­களைப் போட்­டது.


இரா­ணுவம் சார்­பாக திருண சேனா­நா­யக்க (20 நி., 90 நி.), ஜேசுராஜ் பேர்னார்ட் (65 நி., 70 நி.) ஆகியோர் கோல்­களைப் போட்­டனர். ஜாவா லேன் சார்­பாக மாலக்க பெரேரா (87 நி.) கோல் ஒன்றைப் போட்டார்.அன்­றைய தினம் நடை­பெற்ற இரண்­டா­வது போட்­டியில் விமா­னப்­ப­டை­யிடம் கடும் சவாலை எதிர்­கொண்ட கடற்­படை 3 – 2 கோல்கள் அடிப்­ப­டையில் இறுக்­க­மான வெற்­றியை ஈட்­டி­யது.

இவ் வருடம் நடை­பெற்ற போட்­டி­களில் அதீத ஆற்­றல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட இப் போட்­டியில் இரண்டு அணி­யி­னரும் சம­மாக மோதிக்­கொண்­டனர். எனினும் போட்டி முடி­வ­டைய 3 நிமி­டங்கள் இருந்­த­போது கடற்­படை வெற்றி கோலைப் போட்­டது.


கடற்­படை சார்­பாக ஆபி­ரிக் க­ரான டேவிட் ஒசாஜி (12 நி.), மொஹம்­மது இன்சாவ் (18 நி.), நிர்மல் விஜேதுங்க (87 நி.) ஆகியோரும் விமானப்படை சார் பாக குமார லன்கேசர (27 நி.), திமுது லக்மால் குணசிங்க (37 நி.) கோல்களைப் போட்டனர்.