bestweb

ஓஸ்டியோபோரோஸிஸ் எனப்படும் எலும்பு புரை நோய் தாக்காமல் இருக்க..

Published By: Robert

15 Feb, 2016 | 11:52 AM
image

இன்றைய திகதியில் நாற் பது வயதிற்கு மேற்பட்ட ஆண் களுக்கும், பெண்களுக்கும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படுவது சாதார ணமாகி விட்டது. இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என்று கூறுவர். இதனை தடுக்க இயலாதா? என்றால் தடுக்க இயலும். எலும்புக்கு வலுவூட்டுவது கல்சியம் என்னும் தாதுசத்து. இந்த சத்தை நாம் எம்முடைய உடலில் குறையாமல் பார்த்

துக்கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்ப டாது. அலட்சியப்படுத்தினால் உடலில் கல்சி யத்தின் அளவு குறைந்து எலும்பின் வலு குறையும். இதனால் எலும்பு முறிவு கூட ஏற்பட வாய்ப்புண்டு.

ஓஸ்டியோபோரோஸிஸ் என்னும் எலும்பு புரை நோய், எலும்பை உருக்குவதோடு மட்டும் நிற்காமல் கழுத்து மற்றும் முதுகு வலியையும் உருவாக்கும். இந்த நோய் ஆண்களைக் காட்டிலும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக மாதவிடாயின் இறுதி நாட்களின் போது அதாவது மெனோபாஸ் அடையும் காலகட்டத்தில் பெண்களை இது அதிகமாக பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான அறிகுறிகளை உணர்ந்த உடனே இதற்கான தடுப்பு முறைகளில் நாம் கவனம் செலுத்தவேண்டும். அது என்ன வழி என்பதை தற்போது காண்போம்.

முதல் விடயமாக மருத்துவர்கள் பரிந்து ரைப்பது உடற்பயிற்சியைத்தான்.இந்நோயால் பாதிக்கப்பட்டால், வாரத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை உடற்பயிற்சி செய்யவேண்டும். அதிலும் வாரத்திற்கு மூன்று முறையாவது ஏரோபிக் மற்றும் உடலை வலுப்படுத்தும் பயிற்சியை தொடர்ச்சியாக முப்பது நிமிட மாவது செய்யவேண்டும்.

உணவில் உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதால், அது சிறுநீர் மற்றும் வியர் வையின் மூலம் வெளியேற்றும் கல்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உடலில் தேவையான அளவை விட கல்சியம் சத்து குறையும் நிலை உருவாகும். அதன் காரண மாக எலும்பு தேய்மானம் அடையும்.

அதே போல் சிலர் அடிக்கடி கோப்பி அருந்துவார்கள். அதனையும் முற்றாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் கோப்பி அருந்தும் போது, அதிலுள்ள கோப்பைன் உடலில் கல்சியம் உறிஞ்சுதலை தடுத்துவிடுகிறது.

அதே போல் விற்றமின் டி, உடல் கல்சியத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவி செய்கிறது. இத்தகைய விற்றமின் டி சத்து சூரிய ஒளியின் மூலம் அதிகமாக உற்பத்தியாகிறது. அத்துடன் பால், ஓரஞ்சு மற்றும் காலை உணவுத்தானி யங்களிலும் விற்றமின் டி அதிகமாக இருக்கிறது.

அதே சமயத்தில் சில மருந் துகள் இத்தகைய பாதிப்புகளை உருவாக்குகின்றன. மருத்துவர்களின் கண்காணிப்பு மற்றும் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தொடர்ச்சியாக பயன் படுத்தாதீர்கள்.

வேறு சிலருக்கு என்று இல்லாமல் அனைவருக்கும் பொருந்தக்கூடிய மற்றொரு அம்சம், புகை மற்றும் மதுவை முற்றாக தவிர்க்கவேண்டும். இவையிரண்டும் உடலில் உள்ள கல்சியம் அளவை சீர் குலைத்து, ஈஸ்ட்ரோஜன் எனும் எலும்பை வலுவாக்கும் ஹார்மோன்களின் சுரப்பியை கட்டுப்படுத்துகிறது.

எனவே மேற்கண்ட விடயங்களில் கவனமுடன் செயல்பட்டால் நாற்பது வயது முதல் ஆயுள் உள்ளவரைக்கும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கமுடியும்.

டொக்டர். ராஜ்கண்ணா, M.S.,

தொகுப்பு: அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56