பருத்திதுறை நகர சபையையும் ஈழமக்கள் ஜனாயக கட்சியின் ஆதரவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
இன்றையதினம் பருத்துறை நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது 7 வாக்குகள் பெற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த யோ.இருதயராசா தவிசாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமை தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட யோ.இருதயராசா தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியனை விட 7- 6 என்ற அடிப்படையில் ஒரு வாக்குகளை கூடுதலாகப்பெற்று சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதி தவிசாளராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த மதினி நெல்சன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களை பெற்று பெரும்பான்மையை பெற்றிருந்த இந்தச் சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 ஆசனங்களை பெற்றிருந்தது.
எனினும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் இரண்டு பிரதிநிதிகளும் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்தமையால் தற்போது கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM