மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் தாம் தங்கியிருந்த அறையில் உயிரிழந்து காணப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதான  உபுல்ரஞ்சித் கலேகே  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று  பிற்பகலாகியும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்கு திரும்பாமையால்  அவரது அறையினை சென்று  திறந்து பார்த்தபோது உறங்கிய வாறு உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார்  சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்படும் என வாகரை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.