யாழ்ப்பாணம், மானிப்­பாயைச் சேர்ந்த, சுவிற்சர்லாந்தில் வசிக்கும் கலைஞர் குண­பதி கந்­த­சா­மியின் (பாபாஜி) இயக்­கத்தில்  உரு­வான 'இது­காலம்' எனும் முழு நீள தமிழ்த்­தி­ரைப்­படம்  அண்மையில்  நாட­ளா­விய ரீதியிலுள்ள  15 திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கியுள்ளது.

இலங்­கையைச் சேர்ந்த பாபாஜி என்று அறியப்பட்ட  குண­பதி கந்­த­சாமி சுமார் 52 வருடத்திற்கு மேல் சினிமாத்துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

இது காலம் திரைப்படத்தின் திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றை மேற்கொண்டுள்ள பாபாஜி, அத்திரைப்படத்தில் பாத்திரமேற்றும் நடித்துள்ளார்.

இவர் இலங்கையில் ஆரம்பகாலங்களில் வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இலங்­கையில் தயா­ரிக்­கப்­பட்ட மிகவும் பிர­சித்­தி­பெற்ற தமிழ்த்­தி­ரைப்­ப­ட­மான செங்­கை­யா­ழியானின் தயா­ரிப்பில் உரு­வான 'வாடைக்­காற்று' திரைப்­ப­டத்தின்மூலம்  வில்லன் கதா­பாத்­தி­ரத்தில் இலங்கை தமிழ் சினிமா உல­குக்கு அறி­மு­க­மான கலைஞர் இவர். 

இலங்கையில் இருந்து 1983 ஆம் ஆண்­ட­ளவில் புலம்பெயர்ந்த பாபாஜி தற்போது சுவிஸ் நாட்டில் வசித்து வரு­கின்றார். 

இளம் வயதில் தனக்கு இருந்த நடிப்­புத்­துறை மீதான ஆர்­வமே 'இது­காலம்'எனும் முழு­நீளத் தமிழ் திரைப்­ப­டத்தை உரு­வாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்­­பட்­ட­தாக கூறும் பாபாஜி,

இது தொடர்பில் அவர் மேலும் பகிர்ந்துகொள்ளும் போது,

முதல்முதலாக திரைக்கதை, தயாரிப்பு, இயக்கத்தில் உருவான முழுநீள திரைப்படம். இந்ந திரைப்படம் முற்றுமுழுதாக சுவிற்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 தனேஷ் ராஜ் பிரதான நடிகராகவும் கடனாவைச் சேர்ந்த நவனிதா நடிகை பிரதான நடிகையாகவும் பாத்திரமேற்றுள்ளனர்.

அனைத்து நடிகர்களும் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் வாழ் இலங்கையார்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பதி­னான்கு கலை­ஞர்­களைக்கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட இத்­தி­ரைப்­படம் ஒன்­றரை மணித்­தி­யா­லத்தை கொண்­டுள்ளது.

பாடல் வரிகளை எஸ்.பி.ஆர். பாமினியும் செல்வா முகுந்தனும் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவை ரவி அச்சுதன் மேற்கொண்டுள்ளார். 40 வருடங்களின் பின்னர் இலங்கைத் தமிழ் உச்சரிப்பில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாடல்களை கேமலதா ,ஸ்ரீநிவாஸ், கரிச்சரண் ஆகியோர் பாடியுள்ளனர். ஆர்.எஸ் . ரவிப்பிரியன் இதற்கு இசையமைத்துள்ளார். தென்னிந்திய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளேன். 

எவ்விதமான வன்முறையோ அல்லது அரசியலோ இந்த திரைப்படத்தில் கலக்கப்படவில்லை. முழுக்கமுழுக்க காதலுக்கான அங்கீகாரத்தை கொடுக்கக் கூடியதொரு காதல் படமாகும். அத்துடன் குடும்பத்தவர்களுடன் இணைந்து பார்க்கக்கூடிய படம் என்றார்.