இரட்டை வேடம் போடும் சுதந்திர கட்சி 

Published By: Robert

26 Mar, 2018 | 04:41 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமருக்கு எதிராக பாராளுமன்றில் வாக்களித்துவிட்டு உள்ளூராட்சிமன்றங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க முடியாது. ஆகவே பிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கும் அதேவேளை உள்ளூராட்சிமன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சிமைக்க முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.  

Image result for ஜீ.எல்.பீரிஸ் virakesari

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் நான்காம் திகதி பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றை தினமே அதன்மீதான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது. 

ரணில் விக்ரமசிங்க மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். அதன் வெளிப்பாட்டை கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது காண்பித்துள்ளனர். மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்ககையில்லாப் பிரேரணையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே கொண்டு வந்திருக்க வேண்டும். ஏனெனில் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகிக்கும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே அடிக்கடி தெரிவித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடிக்கடி அக்கருத்தை தெரிவித்து வந்தனர்.

எனினும் அவ்வாறு அந்த உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தை தற்போது நடைமுறைப்படுத்தும் காலம் வந்துள்ளது. எனவே அதனை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் தயாரான நிலையில் உள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 44 பேரும் பொதுவான தீர்வு ஒன்றுக்கு வர வேண்டும். அப்போதுதான் நடைமுறைச்சாத்தியமான முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22