அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் உறவு இருந்ததாக கூறி சர்ச்சையை கிளப்பிய நடிகை தனக்கு மர்ம நபர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் ஆபாச பட நடிகை  ஸ்டார்மி டேனியல்ஸ் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னை காதலித்ததாகவும், கடந்த 2006 ஆம் ஆண்டு ட்ரம்ப்புடன் பலமுறை உடல் ரீதியான  உறவு வைத்துள்ளதாகவும்  சி.பி.எஸ் செய்தி நிறுவனத்திற்கு  60 நிமிட நேர்காணல் ஒன்றில் பேசும்போது கூறியிருந்தார்.

ஜனாதிபதி மீதான இந்த குற்றச்சாட்டிற்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தாலும் இது குறித்து பேசுவதை ஸ்டார்மி நிறுத்தவில்லை.

இந் நிலையில் ட்ரம்புடன் உள்ள உறவு குறித்து வெளியில் ஏதும் கூறக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என மர்ம நபர் ஒருவர் லாஸ் வேகாசில் வைத்து தன்னை மிரட்டியதாக  ஸ்டார்மி டேனியல்ஸ் கூறி உள்ளார். 

"ட்ரம்ப்பை தனியாக விட்டுவிடு, அந்த கதையை  மறந்து விடு, உனது மகள் அழகான சிறிய பெண் அவள் அம்மாவுக்கு ஏதாவது  நடந்தால் அவளுக்கு அது அவமானமாக இருக்கும்" என அந்த மர்ம நபர் மிரட்டினான். என ஸ்டார்மி டேனியல்ஸ் மேலும் கூறி உள்ளார்.