போர்த்துக்கல்  நாட்டில் மது போதையில் விமானத்தை இயக்க தயாரான விமானியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போர்த்துக்கல்லில்  ‘போர்த்துக்கல் எயார்லைன்ஸ்’ என்ற விமானம் 106 பயணிகளுடன் ஸ்டட்கார்ட் நகரில் இருந்து லிஸ்பனுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது  விமானத்தை இயக்கவந்த 2 விமானிகளில் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக  விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விமானத்தின் என்ஜின் அறைக்கு சென்ற பொலிஸார்  மது  போதையில் தள்ளாடிய விமானியை கைது செய்துள்ளனர்.

குறித்த காரணத்தால்  ஸ்டட்கார்ட்டில் இருந்து லிஸ்பன் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.