பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ´குடு நுவான்´  என அறியப்படும் நுவான் குணதிலக்க எனும் பாதாள குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கனேமுல்ல பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால்  இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடு நுவான் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து கைக்குண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

குடு நுவான் கம்பஹா, கனேமுல்ல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.