ஹொங்கொங்கில் காதலர் தினத்தையொட்டி எல்.ஈ.டி. ஒளியூட்டப்பட்ட 5,000 செயற்கை வெள்ளை நிற ரோஜாக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சென்ரல் புரோமெனட் மற்றும் தமார் பிராந்தியங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோஜாக்களை பார்வையிட பெருந்தொகையான காதலர்கள் வருகை தருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி செயற்கை ரோஜாத் தோட்டத்தை காட்சிப்படுத்தியுள்ள பன்கொம் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு பிராந்தியங்களில் இந்த ரோஜா தோட்டத்தைக் காட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
முதன்முதலாக இந்த ரோஜா தோட்டம் 2014 ஆம் ஆண்டில் தென் கொரிய நகரான சியோலில் காட்சிப்படுத்தப்பட்டது.