ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்து 17 மணி நேரம் பறந்த குவாண்டாஸ் 787.9 டிரீம் லைனர் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு 2 விமானங்கள் மூலம் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது ஒரே விமானம் இடையில் நிற்காமல் பேர்த் நகரில் இருந்து லண்டனுக்கு பயணம் செய்துள்ளது. குவாண்டாஸ் 787.9 டிரீம் லைனர்’ நிறுவனத்தின் விமானம் இச்சாதனை நிகழ்ச்சியுள்ளது.

பேர்த்நகரில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 14,498 கி.மீட்டர் (9,009 மைல்) தூரம் இடை நிற்காமல் 17 மணி நேரம் பறந்தது.

மேலும் இது இடையில் நிற்காமல் நீண்ட தூரம் பறந்த விமானம் என்ற பெருமை பெற்றுள்ளது. தோகாவில் இருந்து ஆக்லாந்துக்கு 14,529 கி.மீட்டர் தூரம் பறந்து முதலிடம் பிடித்துள்ளது.

தற்போது பேர்த்நகரில் இருந்து லண்டனை சென்றடைந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த விமானத்தில் 200 பயணிகள் மற்றும் 16 ஊழியர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.