ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் ஜேர்மனுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

ஜனாதிபதியுடன் தொழிற்றிறன் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் உடன் சென்றனர்.

ஜேர்மன் அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் விஜயம் செய்தஜனாதிபதி, ஜேர்மன் நாட்டின் நிதி பெற்று இலங்கையில் எரிசக்தி மற்றும் மின்சக்தியினை புத்துயிரூட்டும் தொழிற்பாடுகள் தொடர்பிலும் வர்த்தக பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தவும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவும் கவனம் செலுத்தவுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அவரை வரவேற்பதற்காக ஜேர்மன் நாட்டு அதிபர் அன்ஜலோ மார்கல் தலைமையில் விசேட நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் நாடாளுமன்றம் செல்லும் ஜனாதிபதி, அந்நாட்டின் பல முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.