அரசியல் கைதியான ச. ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளும் இன்று அவர்களது உறவினர்கள் சகிதம் வட மாகாண ஆளுனரை சந்தித்து தந்தையின் விடுதலை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பில் ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பின் பொது ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளுடன் விசன் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு நிலைமையை எடுத்தியம்பியிருந்தனர்.

பிள்ளைகளினதும், உறவினர்களதும்  செவிமடுத்த வட மாகாண ஆளுனர் ரெஜினோல் குரே இவ்விடயம் தொடர்பாக ஜனாபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவண செய்வதாக தெரிவித்தார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.