மஸ்கெலியா - மவுசாசலை நீர்தேக்க வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் இரண்டு ஏக்கர் காடு நசமாகியதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

 

மஸ்கெலியா, நல்லத்தண்ணி பிரதான பாதையின் பிரவுன்லோ பகுதியிலே இன்று இத்  தீ பரவல் ஏற்பட்டுள்ளது. 

தீ பரவலையடுத்து விரைந்து செயற்பட்ட மஸ்கெலியா பொலிஸார் மற்றும் தீயனைப்பு துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துள்ளதுடன் விசமிகளினால் காட்டுக்கு தீ வைக்கப்பிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.