மட்டக்களப்பு – மைலம்பாவெளி ஆலய வழிப்பாட்டிற்கு நேற்று காரில் சென்று வரும் போது கொள்ளையர் குழு ஒன்று கொள்ளையடிக்க முற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் குருநாகல் - அலாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் எம்.ஹேரத் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருகையில்,
உயிரிழந்த குறித்த பொலிஸ் அpதகாரி சாவக்கச்சேரியிலுள்ள அவரது குடும்ப நண்பர்களுடன் மட்டக்களப்பிற்கு ஆலயங்களை வழிப்பாடு செய்ய நேற்று முன் தினம் கார் ஒன்றில் புறப்பட்டுச் சென்று மட்டக்களப்பிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள மைலம்பாவெளி ஆலயத்திற்கு சென்று வழிப்பாடுகளை முடித்து விட்டு ஆலயத்திற்கு முன்னாள் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த காரில் ஏறு முற்பட்ட போது கொள்ளையர் குழு ஒன்று கூரிய ஆயுதங்களை காட்டி அவர்களிடமிருந்து பணம் நகைகளை கொள்ளையிட முயற்சித்த போது மோதல் ஏற்பட்டுள்ளது.
இம் மோதலில் பொது மக்களும் இணைந்து கொள்ளையர்கள் மூவரை மடக்கிப் பிடித்ததோடு கொள்ளையர்களின் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரியை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் மூவரும் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மடக்கி பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் ஏறாவூர் தன்னாமுனையைச் சேர்ந்தவர்கள் எனவும் கொள்ளைக்கு பயன் படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கூரிய ஆயதங்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொட்ரபான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் உடல் பிரேத பிரசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என மட்டக்களப்பு வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM