கொமர்ஷல் வங்­கி­யா­னது Joint Apparel Association Forum (JAAF) உடனும் இந்த துறைக்­கான ஊழியர் நம்பக திட்­ட­மொன்றை முகா­மைப்­ப­டுத்­தி­வரும் Channel 17 உடனும் பங்­கு­டமையை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் இலங்­கையின் ஆடை உற்­பத்தித் துறை நிறு­வ­னங்­க­ளுக்கு விசேட அனுகூ­லங்­களைக் கொண்ட தனித்­து­வ­மான கடன் அட்­டையை வழங்கி உதவ இருக்­கி­றது. JAAF செயல்­ப­டுத்­தி­வரும் ரன்­சலு நம்­பக சலுகைத் திட்­டத்தின் எந்­த­வொரு அங்­கத்­த­வரும் Commercial Bank இல் கணக்கை வைத்­தி­ருக்கும் அல்­லது கணக்கை ஆரம்­பிக்கும் பட்­சத்தில் அவ­ருக்கு ரன்­சலு சலுகை அட்டை இல­வ­ச­மாக வழங்­கப்­படும்.

இந்த டெபிட் கார்ட் உரி­மை­யா­ளர்கள் ஏற்க­னவே ரன்­சலு திட்­டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளும் அனு­கூ­லங்­க­ளுக்கு மே­ல­தி­க­மாக வழ­மை­யானCommercial Bank டெபிட் கார்ட்­தா­ரர்கள் அனு­ப­விக்கும் பரந்த அள­வி­லான தள்­ளு­ப­டி­க­ளையும் மற்றும் சலு­கை­க­ளையும் பெற்றுக் கொள்ள தகுதி உடை­ய­வர்­க­ளாவர். 350,000 பேர் அங்கம் வகிக்கும் ரன்­சலு நம்­பக திட்­டத்­தி­லி­ருந்து அனு­கூ­லங்­களை கோரு­வ­தற்கு இந்த அட்டை ஒரு அடை­யாள சின்­ன­மா­கவும் விளங்கும்.

ரன்­சலு சலுகை நம்­பகத் திட்டம் ஏற்க­னவே அதன் அங்­கத்­த­வர்­க­ளுக்கு அத்­தி­யா­வ­சிய நுகர்வுப் பொருட்கள், விருந்தோம்பல், மருந்தக பொருட்கள், ஆடை, அணிகள் ஆகியவற்றில் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.