"வெற்றிப்பெற்ற பெண் உறுப்பினர்களை மாற்று கட்சியினர் 7 கோடி ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளார்கள்"

Published By: Digital Desk 7

24 Mar, 2018 | 02:36 PM
image

"பெண்கள் தமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டும். அப்போது தான் சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்" என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் தின விழா இன்று நுவரெலியா நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆறுமுகன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பெண் உறுப்பினர்களுக்கு மாற்று கட்சியினர் தொலைபேசி மூலம் அழைப்பெடுத்து சபைகளின் ஆட்சியை அமைக்காமல் இருப்பதற்கு  7 கோடி ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பெண் உறுப்பினர்கள் கொள்கையுடன் இருப்பவர்கள். எவருக்கும் விலை போகமாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாம் கலந்துரையாடியுள்ளோம். பிரதேச சபைகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக விசேடமாக நிதி தருவதாக கூறியுள்ளார். இதன்மூலம் எதிர்பார்த்த அபிவிருத்திகளை செய்துக்கொள்ளலாம்.

இம்முறை காங்கிரஸில் வெற்றிப்பெற்ற பெண் உறுப்பினர்கள் ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

எதிர்வரும் காலங்களில் பெண்களுக்கு அரசியல் பிரவேசமாக மாகாண சபை மட்டுமல்லாது, பாராளுமன்றம் வரை செல்ல வாய்ப்புகள் வழங்கப்படும்" என  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46