அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யொன்­றுக்­கான கலந்­து­ரை­யா­டலின் போது, இந்த வருட காதலர் தினத்­தை­யொட்டி தனது மனைவி மிசெல் ஒபா­மா­வுக்கு கவி­தை­யொன்றை ஒப்­பு­வித்து அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­துள்ளார்.

எச்.ஜி. தொலைக்­காட்­சியில் பிர­பல அறி­விப்­பாளர் எலென் டிஜென­ரெஸால் நடத்­தப்­பட்ட நிகழ்ச்­சியில் தோன்­றிய பராக் ஒபாமா, இந்த நிகழ்ச்சி மேடையில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த இரு பூங்­கொத்­து­க­ளுக்கு மத்­தியில் நின்று மிசெ­லுக்­காக காதலர் தின கவி­தை­யொன்றை ஒப்­பு­வித்தார்.

இதன்­போது தான் மிசெலை மிகவும் நேசிப்­ப­தா­கவும் அவர் அறிந்­துள்­ளதை விடவும் தான் அவரில் மிகவும் அக்­க­றை­யா­க­வுள்­ள­தா­கவும் பராக் ஒபாமா தெரி­வித்தார்.

இந்­நி­லையில் இந்த நிகழ்ச்­சியில் மிசெல் ஒபாமா ஏற்­க­னவே பதிவு செய்­யப்­பட்ட காணொளிக் காட்­சியில் தோன்றி, பராக் ஒபா­மா­வுக்­காக காதலர் தின கவி­தை­யொன்றை ஒப்­பு­வித்தார்.

“ரோஜாக்கள் சிவப்பு வயலட் பூக்கள் நீலம் நீங்கள் ஜனா­தி­பதி நான் உங்கள் இரைச்சல்' என பொருள்­படும் கவி­தையை மிசெல் ஒப்­பு­வித்தார்.

மேற்­படி நிகழ்ச்­சியில் பராக் ஒபா­மா­விடம் மிசெ­லுடன் சண்­டை­யிட்ட அனு­பவம் குறித்து வின­வப்­பட்ட போது “திரு­ம­ண­மா­னதன் பின்­ன­ரான 15 வருட வாழ்க்­கையை நோக்­கினால் அவர் (மிசெல்) எப்­போ­துமே சண்டையிடுவார். ஆனால், திடீரென ஆச்சரியப்படத்தக்க வகையில் அவர் சண்டையை நிறுத்திவிட்டார்" என அவர் கூறினார்.