இலங்­கையில் கருக்­க­லைப்பை சட்­ட­மாக்­கு­வ­தற்கு எதி­ராக சில மத நிறு­வ­னங்கள் அண்­மையில் கூச்சல் மேற்­கொண்­டதைத் தொடர்ந்து நான் இந்த கட்­டு­ரையை எழு­து­கிறேன். நான் இவ்­வி­டயம் தொடர்­பாக உல­க­ளா­விய கருத்­துகள், நூல்­களைப் பற்றி அறிந்­துள்ளேன். அத்­துடன் சர்­வ­தேச நிபு­ணர்­க­ளு­டனும் இது குறித்து கலந்­தா­லோ­சித்­துள்ளேன். இங்கு நான் கருக்­க­லைப்பு குறித்த எனது அறிவைத், தக­வல்­களை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­கிறேன். சில சர்­வ­தேச நிபு­ணர்கள் அயர்­லாந்து குடும்ப திட்­ட­மிடல் சங்­கத்­து­டனும் பிர­ஜைகள் பணி­ய­கத்­து­டனும் இணைந்து கருக்­க­லைப்பை அயர்­லாந்தில் தளர்த்­து­வது தொடர்­பாக பணி­யாற்றி வரு­கின்­றனர். 

அயர்­லாந்தில் கருக்­க­லைப்பு செய்­வது சட்­ட­வி­ரோ­த­மாகும். அயர்­லாந்து பிர­ஜைகள், பணி­யகம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரி­டையே நான் கருக்­க­லைப்பு தொடர்­பான அயர்­லாந்து சட்­டத்தில் திருத்தம் கொண்­டு­வர வேண்டும் என முயன்று வரு­கிறேன். 

அயர்­லாந்து பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்தின் பின்னர் (சட்­டப்­பி­ரிவு– 08) கருக்­க­லைப்பை சட்ட ரீதி­யாக மேற்­கொள்­வ­தற்கு 2018 இல் கருத்­துக்­க­ணிப்பு மேற்­கொள்­வது என தீர்­மா­னிக்­கப்­பட்­டது. சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்பை மேற்­கொள்­ளா­தி­ருக்க, அதா­வது கருக்­க­லைப்பை சட்ட ரீதி­யாக்க இலங்­கையில் இதுவே தக்க தருணம். இலங்­கையில் சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்பு தாய் மர­ணத்­திற்கு முக்­கிய கார­ண­மாக உள்­ளது. 

இந்த விடயம் தொடர்பில் பதி­ல­ளிக்­கக்­கூ­டிய முக்­கிய கேள்­வி­க­ளாக பின்­வ­ரு­வன அமை­கின்­றன; 

* சட்­ட­பூர்வ கருக்­க­லைப்பு சேவையை வழங்க சுகா­தா­ர­சேவை அடிப்­படைக் காரணம் என்ன? 

* எதிர்­கா­லத்தில் இலங்­கையில் கருக்­க­லைப்பு சட்டம் தொடர்பில் தொடர்­பு­பட்ட மனித உரி­மைகள் நிலை­வரம் என்ன? 

* இலங்­கையில் சிறந்த இனப்­பெ­ருக்க சுகா­தார சேவையை உறுதி செய்ய என்ன கொள்­கைகள் முன்­வைக்­கப்­பட வேண்டும்?

இக்­கேள்­வி­க­ளுக்கு சர்­வ­தேச மகளிர் நோயியல் மற்றும் மகப்­பேற்று மருத்­துவ மன்­றத்தின் எப்.ஐ.ஜி.ஓ தீர்­மா­னத்தின் வழி­நின்று பதில் பெற­மு­டியும். 

* மருத்­துவ கார­ணங்­க­ளுக்­காக (வாழ்க்­கைக்கும் சுகா­தா­ரத்­திற்கும் ஆபத்­தான  கட்­டத்தில் கருக்­க­லைப்­பா­னது சிறந்த இனப்­பெ­ருக்க சுகா­தார சேவை­யாக பொது­வாக அனைத்து நாடு­க­ளாலும் கரு­தப்­ப­டு­கின்­றது. 

மருத்­துவ கார­ணங்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட கருக்­க­லைப்பு தொடர்­பாக எப்.ஐ.ஜி.ஓ. என்ன கரு­து­கி­றது என்றால் பெண்­களின் உரி­மைகள் தொடர்­பாக பாது­காப்­பற்ற கருக்­க­லைப்பை தவிர்த்து பாது­காப்­பான கருக்­க­லைப்பை நியா­யப்­ப­டுத்தல். 

பல பொது­மக்கள், வைத்­தி­யர்கள் உட்­பட கரு­து­வது என்­ன­வென்றால் இயன்­ற­வரை கருக்­க­லைப்பை தவிர்ப்­பது  என்­ப­தாகும். 

இக்­கு­ழுவின் தீர்­மா­ன­மாகப் பெண்­க­ளுக்கு  உரிய வழி­காட்­டு­தலின் கீழ் சிறந்த முறையில் கருக்­க­லைப்பு மேற்­கொள்ள அவர்­க­ளுக்கு உரிமை உள்­ளது என்­ப­தாகும். 

எம்.ஐ.ஜி.ஒ. மற்றும் உலக சுகா­தார ஸ்தாபனம் போன்ற சர்­வ­தேச அமைப்­புகள் ஏன் பாது­காப்­பான கருக்­க­லைப்பை சிபார்சு செய்­கின்­றன? 

பாது­காப்­பற்ற கருக்­க­லைப்­பா­னது வலி­யையும் மர­ணத்­தையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது. 

கருக்­க­லைப்பு குற்­ற­மா­னது. மரண வீதத்­தையே அதி­க­ரிக்கும்.  குற்­ற­மற்ற கருக்­க­லைப்பு மரண வீதத்தை நிச்­சயம் குறைக்கும்.  குற்­ற­மற்ற கருக்­க­லைப்பு, கருக்­க­லைப்பு வீதத்தை அதி­க­ரிக்­காது. 

உல­க­ளா­விய ரீதியில் ஆண்­டு­தோறும் பாது­காப்­பற்ற கருக்­க­லைப்­பிற்கு 50,47,540 பெண்கள் உட்­ப­டு­கி­றார்கள்.  கருக்­க­லைப்பை குற்­ற­மற்­ற­தாக்­குதல் தாய் மரண வீதத்தை நிச்­சயம் குறைக்கும். தென் ஆபி­ரிக்க பொது மருத்­து­வ­ம­னை­களில் 1994 சட்ட மறு­சீ­ர­மைப்­பிற்கு முன்னர் ஆண்­டு­தோறும் பாது­காப்­பற்ற கருக்­க­லைப்பு மூலம் 425 மர­ணங்கள் ஏற்­பட்­டன. கருக்­க­லைப்பை அங்கு சட்­ட­பூர்­வ­மாக்­கியப் பின்னர் ஆண்­டுக்கு 36 மர­ணங்கள் என குறைந்­தது. 1975 இல் பிரான்­ஸிலும் இத்­தா­லி­யிலும் கருக்­க­லைப்பை சட்­ட­பூர்­வ­மாக்­கிய பின்னர் மரண வீதம் 20 இல் இருந்து 10 வீதத்­திற்கு குறைந்­தது. 

உட­னடி பொது சுகா­தாரம் 

“பல நாடு­களில் கருக்­க­லைப்பும் உயர் தாய், சேய் மரண வீதமும் பொது சுகா­தார பிரச்­சி­னை­யாக உள்­ளது” உலக சுகா­தார சபை தீர்­மானம் 20:41 ,+ 23 மே 1967 பாது­காப்­பற்ற கருக்­க­லைப்பு  பெண்­க­ளுக்கு பாரி­ய­தொரு பொது சுகா­தார  பிரச்­சி­னை­யாக உள்­ளது. இது தொடர்­பாக அர­சுகள், தொண்டு நிறு­வ­னங்கள் என்­பன சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்பை குறைக்க / கைவிட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மனித உரி­மைகள், இனப்­பெ­ருக்க உரி­மைகள் நீண்ட தொலை­நோக்கு உடை­ய­வை­யா­யினும் பேணப்­பட வேண்டும். 

உல­க­ளா­விய மனித உரி­மைகள் தீர்­மானம்(1948) அதி உச்­ச­பட்ச சுகா­தாரம் என்­பது அடிப்­படை உரி­மை­களில் ஒன்று ஆகும்.  சுகா­தாரம் என்­பது இன, மத, அர­சியல் நம்­பிக்கை, பொரு­ளா­தார, சமூக நிலைப்­பா­டு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு பேணப்­பட வேண்டும். 

உலக சுகா­தார ஸ்தாபனம் (Who) அர­சி­ய­ல­மைப்பு 1948 உள, உடல் மற்றும் சமூக சிறப்­பான நிலையே சுகா­தாரம் ஆகும். இது நோயை தடுத்தல் என்­பது மட்டும் ஆகாது. 

மனித உரி­மைகள் தொடர்பில் ஐ.நா. சர்­வ­தேச மா­நாடு டெஹரான் (1968) இனப்­பெ­ருக்க உரிமை என்­பது மனித உரி­மை­களில் ஒரு பகு­தி­யாகும்.  மனித உரி­மைகள் என்ற வகையில் பாது­காப்­பான கருக்­க­லைப்பு உரிமை பின்­வரும் தலைப்­பு­களில் கரு­தப்­பட வேண்டும். 

வாழ்­வ­தற்­கான உரிமை, சுகா­தா­ரத்­திற்­கான உரிமை, பாகு­பா­டற்ற சமத்­து­வத்­திற்­கான உரிமை, கொடூ­ர­மான, மனி­தா­பி­மா­ன­மற்ற தரக்­கு­றை­வான பேணல் அற்ற தன்­மைக்­கான உரிமை, சுதந்­திரம் தனி­நபர் பாது­காப்பு மற்றும்  தனித்­தி­ருந்தல் என்­ப­தற்­கான உரிமை, தகவல் மற்றும் கல்­விக்­கான உரிமை.  

பாது­காப்­பான கருக்­க­லைப்பு பற்றி புரிந்­து­ணர்­த­லுக்கு எது அவ­சி­ய­மா­கி­றது, இது கருக்­க­லைப்பை தூண்­டு­வ­தாக அமை­யக்­கூ­டாது, சிந்­தாந்த கோட்­பாடை மதிப்­ப­தாக இருக்க வேண்டும், பெண் கரு­வுறும் கர்ப்ப காலத்தை வரை­ய­றுத்து தீர்­மா­னித்தல், கருக்­க­லைப்­புக்­கான தேவையை  வலி­யு­றுத்தும் நிபந்­த­னைகள், கருக்­க­லைப்பை குறைப்­ப­தற்­கான சிறந்த ஆளு­மை­யுடன் தலை­யீடு செய்­தலை தூண்­டுதல், பாது­காப்­பான கருக்­க­லைப்­புக்கு திட்­ட­மி­டுதல் மற்றும் முகாமை செய்தல், அனு­பவம் உள்ள திற­மை­யா­ன­வர்­களின் சேவை, சான்­றுள்ள தரா­தரம் மற்றும் வழி­காட்­டல்கள், கருக்­க­லைப்பின் வகைகள் யாரால் எங்கு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்ற தக­வல், கருக்­க­லைப்பு முறைகள், சுகா­தார சேவை நிபு­ணர்கள் மற்றும் வச­திகள் தொடர்பில் சான்று மற்றும் அனு­மதி, தகுந்த நபரின் (வைத்­தி­யரின்) அணு­கு­முறை 

இக்­கட்­டுரை எமது நாட்டில் கருக்­க­லைப்பு பற்றி எவ்­வாறு உத­வக்­கூடும்? 

பிறப்பு, கருக்­க­லைப்பு, இறப்பு என்­பன மனித இனம் தோன்­றிய காலத்தில் இருந்து தொன்­று­தொட்டு நிலவி வரு­கி­றது. இலங்­கையில் தாய் மரண வீதத்தில் மூன்றாம் இடத்தில் கருக்­க­லைப்பு காணப்­ப­டு­கி­றது. இலங்­கையில் பிரித்தானியர் காலத்தில் 1885 இல் கருக்­க­லைப்பு குற்­ற­மாக இருந்து வரு­கி­றது. நூற்­றுக்கு நூறு வீதம் பாது­காப்­பான மகப்­பேறு என்று எந்­த­வொரு  நாட்­டிலும் இல்லை. தாய் மரணம் என்­பது இடம்­பெ­றவே செய்யும். ஆனால் குறைக்க முடியும். இங்கு தாய், சேய் நல மருத்­து­வர்கள் 320 பேர் உள்­ளனர். உங்­களின் திரு­ம­ண­மா­காத ஒரே 16 வயது மகள் கர்ப்­ப­முற்றால் நீங்கள் என்ன செய்­வீர்கள்? பல பெற்றோர் இது தொடர்­பான பிரச்­சி­னை­யுடன் என்னை அணு­கி­யுள்­ளனர். திரு­மணம் ஆகாமல் கர்ப்­ப­மான பெண்­களை பரா­ம­ரிக்கும் நிலை­யத்­திற்கு உங்கள் மகளை அனுப்பி பிள்ளை பெற்­றாலும் பிள்­ளையை தத்­துக்­கொ­டுத்­து­விட்டு வீடு திரும்­பவும் என கூற­லாமா அல்­லது கருக்­க­லைப்பு சட்ட ரீதி­யான சிங்­கப்பூர் போன்ற நாடு­க­ளுக்கு அனுப்­பவும் என கூற­லாமா? கருக்­க­லைப்பின் ஒரு வாரத்­திற்கு பின்னர் அப்பெண் பாட­சாலை செல்ல முடியும். மகளின் எதிர்­கா­லமே இங்கு முக்­கியம். 

இத்­தனை வருடகாலமாக கருக்கலைப்பு பற்றிய  எந்தவொரு  கூக்குரலும் கூச்சலும் இடம் பெறவி ல்லை. கருக்க லை ப்பை அண்மையில் சட்டபூர்வமாக்க எத்தணித்தபோதே கூச்சல் போடுகின்றனர். கருக்கலைப்பால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாத ஐக்கிய இராச்சியம் போன்று ஏன் இலங்கை மாறக்கூடாது? கருக்கலைப்பை சட்ட ரீதியாக மாற்றாவிட்டால் சட்டவிரோத கருக்கலைப்பு வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். நானே வயது முதிர்ந்த மகப்பேற்று மருத்துவர் ஆகும். சட்டவிரோத கருக்கலைப்பில் இரத்தப்பெருக்கிற்கு உட்பட்டு பல பெண்கள் மரணிப்பதைப் பார்த்துள்ளேன்.  ஒருவர் சட்டபூர்வ கருக்கலைப்பிற்கு ஆதரவு வழங்கா

விட்டால் அவர் மறைமுகமாக சட்டவிரோத கருக்கலைப்பிற்கு ஆதரவு வழங்குகிறார் என்ற பேராசிரியர் எஸ் அருட்குமரனின் வசனத்துடன் இதனை நிறைவு செய்கிறேன்.

(பேராசிரியர் வில்பிரட் பெரேரா)