நேற்றிரவு நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

பெற்றோல் மற்றும் டீசல்  ஆகியவற்றின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அதிகரித்துள்ளதாக ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின்  விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஐ.ஓ.சி. எல்.பி 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.