உலகக்கிண்ண இரு­ப­துக்கு 20 தொட­ருக்­கான சிம்­பாப்வே குழாம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­ணியில் ஒரு ஆண்டு இடை­வே­ளைக்கு பின்னர் வேகப்­பந்து வீரர் ரெண்டி சட்­டரா மீண்டும் அணிக்கு அழைக்­கப்­பட்­டுள்ள நிலையில் பான்­யன்­ஹ­ரவும் உள்­வாங்­கப்­பட்­டுள்ளார். சிபன்கா, முசா­ர­பனி, பிரைன் விட்­டோரி ஆகியோர் அணியில் இருந்து நீக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஹமில்டன் மச­ஹட்சா தலை­மை­யி­லான சியன் வில்­லியம்ஸ், சட்­டரா, மச­ஹட்சா, பான்­யா­சார, பீட்­டர்மூர், சிக்­கும்­புர, சிக்­கந்தர் ராசா, ரிச்­சமண்ட், லுகே ஜான்வே, சிசோர, நெவி­லி­மட்­சிவ, மல்கோல் வாலர், சிரெம்மர் ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.

இரு­ப­துக்கு 20 உலக­க்­கிண்ண கிரிக்கெட் தொடர் மார்ச் 8ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம்­ தி­கதி வரையில் இந்­தி­யாவில் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதில் பங்­கேற்கும் 16 அணி­களில் 15 நாட்டு அணிகள் தமது விப­ரத்தை அறி­வித்­துள்ளன இலங்கை கிரிக்கெட் சபை இது­வ­ரையில் பெயர் விப­ரங்­களை அறி­விக்­க­வில்­லை­யென்­பது குறிப்­பி­டத்­தக்­கது.