ரஷ்யாவை சேர்ந்த மொடல் அழகி ஒருவர் துபாயில் உள்ள விடுதி ஒன்றின் 6ஆவது மாடியிலுள்ள அறையொன்றில் தங்கியிருந்துள்ளார்.
குறித்த மொடல் அழகியின் அறைக்கு அருகில் இருந்த அறையில் தங்கியிருந்த அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் மொடல் அழகியின் அறைக்கு அத்து மீறி நுழைந்து தனது ஆசைக்கு இணங்கும்படி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
தொழிலதிபரின் குறித்த செயலாள் அதிர்ச்சி அடைந்த மொடல் அழகி தொழிலதிபரிடம் இருந்து தப்பிக்க ஜன்னல் வழியாக 6ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
6ஆவது மாடியிலிருந்து கீழே குதித்ததால் அவரது எலும்புகள் முறிவடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்க தொழிலதிபர் துபாயில் இருந்து தப்பிவிட்டதாகவும் அவரை பிடிக்க அமெரிக்க பொலிஸாரிடம் துபாய் பொலிஸார் நாடியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.